உதகை நகரின் 200வது ஆண்டு கொண்டாட்டம்: அமைச்சர் ஆலோசனை
உதகை நகரின் 200வது ஆண்டு கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.;
உதகை நகரத்தை உலகிற்கு அறிமுகம் செய்து 200 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதனைக் குறிக்கும் வகையில் ஓராண்டு நடைபெறவுள்ள விழாவை உதகையில் அடுத்த மாதம் 20 ந்தேதி 124 வது மலர்க்காட்சி துவக்கவிழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைக்க உள்ளதாக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா கூறினார்.
உதகையில் இன்று நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா மற்றும் வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் தலைமையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், நீலகிரியின் வரலாற்றை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
உதகையை கண்டுபிடித்த சர் ஜான் சால்லிவன் திருவுருவ சிலையை உதகையில் நிறுவுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கூறினார்.
உதகையில் இயங்கி வந்த இந்துஸ்தான் புகைப்பட தொழிற்சாலை மூடப்பட்டதையடுத்து அப்பகுதியில் 3000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்களிடையே 200 ம் ஆண்டிற்கான கொண்டாட்ட கருத்தும் கேட்கப்பட்டது.
வனத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட உதகையை சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.