20 அடி தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை மீட்பு.

உதகை அருகே சுமார் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமை காலில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்தது பொக்லின் மூலம் வனத்துறையினர் மீட்டனர்

Update: 2021-04-08 14:40 GMT

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வனப் பகுதிகளில் இருந்து தண்ணீரைத் தேடி அதிக அளவிலான காட்டு டெருமை கூட்டம் உலா வருகின்றன. இந்நிலையில் உதகை அருகே உள்ள ரோகிணி பகுதியில் இரவில் தண்ணீரைத் தேடி வந்த காட்டு எருமை கூட்டத்தில் ஒரு காட்டெருமை மட்டும் பள்ளத்தில் தவறி விழுந்தது இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு படுத்த நிலையில் இருந்துள்ளதை அப்பகுதி குடியிருப்புவாசிகள் கண்டுள்ளனர்.

பின்பு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டுள்ளனர் காலில் பலத்த காயம் ஏற்பட்ட காட்டெருமையை பொக்லின் இயந்திரம் மூலம் அதை மீட்டனர் பின்னர் RNB கெஸ்ட் ஹவுஸ் பகுதிக்கு காட்டெருமையை கொண்டு செல்லப்பட்டு அங்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News