கனமழை எதிரொலி: உதகைக்கு 2 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை

தொடர் கனமழை எதிரொலியாக, உதகைக்கு 2 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை தரவுள்ளதாக, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-07-23 11:20 GMT

உதகை அரசு சேட் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி (PVC) வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

உதகை மற்றும் கூடலூரில் மழையளவு அதிகரித்து காணப்படுகிரது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் குழுக்கள் இன்று வரவுள்ளனர். இவர்களில் ஒரு குழு உதகைக்கும்,  ஒரு குழு கூடலூரிலும் தங்கியிருந்து, வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டால்,  உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

Similar News