உதகையில் கல்லூரி மாணவர்கள் இணைய வழி மூலம் கல்வி பயில, தமிழக அரசு அறிவித்த 2 ஜிபி இலவச டேட்டா சிம் கார்டுகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் இணையவழி கல்வி பயில, அரசு அறிவித்த விலையில்லா இலவச 2 ஜிபி டேட்டா சிம் கார்டுகள் வழங்கும் விழா, உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நிறுவனங்களுடைய சிம் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொறியியல், பல்தொழில்நுட்பம் மற்றும் கலை, அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் 9 ஆயிரத்து 320 மாணவ, மாணவிகளுக்கு இலவச சிம் கார்டுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கப்பச்சி வினோத் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.