உதகையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: தேங்கும் குப்பையால் கப்ஸ்

உதகையில், ஊதியம் கேட்டு, 3 நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கழிவுகள் தேங்கியுள்ளன.

Update: 2021-07-26 02:53 GMT

உதகையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், பல இடங்களில் குப்பைகள் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

உதகையில், தூய்மைப்பணியாளர்களுக்கு  கடந்த ஜூன் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுநாள் வரையில் சம்பளம் வழங்கப்படாததால் நகர்புறம், நகரில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக, குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. நகர்புறத்தில் பல பகுதிகளில் சாலையோரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. இதனால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

சம்பளம் வழங்கினால் மட்டுமே பணியை தொடருவோம் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி, நகரின் தூய்மைக்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News