உதகையில் தடுப்பூசி மையத்தில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு
உதகை தனியார் பள்ளியில் தடுப்பூசி டோக்கன் வழங்கவில்லை என பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகையில் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள் டோக்கன் கிடைக்காததால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் இதனால் பரபரப்பு நிலவியது. நீலகிரி மாவட்டத்தில் இன்று பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதையடுத்து நகர்புறத்தில் உள்ளவர்களுக்கு அரசுகலைக் கல்லூரி மற்றும் தனியார் பள்ளியில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என கூறியிருந்த நிலையில் இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த குவிந்தனர்.
டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என கூறியதை அடுத்து டோக்கன் பெறாமல் வந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். மேலும் டோக்கன் வழங்காததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த நகராட்சி ஆணையாளர் சரஸ்வரதி டோக்கன் இருந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் இல்லையெனில் தடுப்பூசி செலுத்தப்படாது எனக் கூறி டோக்கன் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து டோக்கன்களை வழங்கினார்.
மேலும் பொதுமக்கள் கூறுகையில் தங்கள் பகுதிகளுக்கு இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை எனவும் அதனால் தடுப்பூசி களுக்கு மையங்களுக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது சரியான முறையில் டோக்கன் வழங்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். டோக்கன் பெறாமல் தடுப்பூசி செலுத்த வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.