உதகையில் மருந்தகத்திற்கு சீல்
உதகை நகரில் மருந்து கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடையை திறந்ததால் 5 ஆயிரம் அபராதம் மற்றும் சீல் .
கொரோனா இரண்டாம் அலை காரணமாக புதிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது இதுமட்டுமல்லாமல் மருந்தகங்கள் வாரம்தோறும் திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று உதகையில் ஒரு மருந்துக் கடையின் உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உரிமையாளர் மருத்துவமனையில் உள்ள நிலையில் கடையை திறந்து விற்பனை செய்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட துணை ஆட்சியர் மோனிகா ராணா உடனடியாக கடை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதோடு அந்த மருந்தகத்திற்கு 5 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைத்தார்.
நகர்ப்புறத்தில் இதுபோன்ற கடைகள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.