ஊட்டி பகுதியில் தண்ணீர் தேடி வந்து கால்வாயில் விழுந்த காட்டு மாட்டினை மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் மீட்டனர்.
ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரம் மற்றும் அதிகாலை வேளையில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.இதையடுத்து உதகை அருகே உள்ள மஞ்சனகொரை பகுதியில் இன்று அதிகாலை நீர் அருந்த வந்த காட்டுமாடு ஒன்று கால்வாயில் விழுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கால்வாயில் விழுந்த காட்டுமாடை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.