கண்களுக்கு விருந்தாகும் உதகை பனி மூட்டம்
உதகையில் அணைகளின்மேல் அதிகாலை வேளையில், மேக மூட்டம் காணப்பட்டது. சுற்றுலாபயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்கள் கண்களுக்கும் அது விருந்தாக அமைந்துள்ளது.
உதகையில் நீர்நிலைகளை மூடிய உறைபனி மேகமூட்டம் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
உதகையில் உறை பனி நீர், பனி என இருவேறு காலநிலை நிலவுவதால் அதிகாலை வேளையில் பல நீர்நிலைகளில் மேல் மேகமூட்டமாய் பனி காணப்படுகிறது. இதில் உதகை படகு இல்ல ஏரி, எமரால்டு அணை, காமராஜர் அணை, உள்ளிட்ட அணைகளின் மேல் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் உறைபனி மேகமூட்டம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. அதிகாலை வேலையிலிருந்து சுமார் 10 மணி வரை இந்த மேக மூட்டங்கள் வெயில் பட்டவுடன் ஆவியாக மாறி கலைந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பிரம்மிப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.