நீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் என 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 பறக்கும்படை குழுக்கள் உள்ளது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 20,73,800 ரூபாய் பணமும் 3,30,000 மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினால் புகார் தெரிவிக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குள் வர தடை இல்லை என்றும் கொரோனா பரிசோதனை செய்தபின் அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.