உதகை பூங்காவில் கள்ளிச் செடி அலங்காரம்
45 ரகங்களில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள கள்ளிச் செடி அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி அலங்கார மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கள்ளிச்செடி அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இதில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இங்குள்ள காலநிலையை அனுபவிக்க வெளிநாடு மட்டுமன்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் குவிந்து வருகின்றனர். தோட்டக்கலை துறை சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க இப் பூங்காவில் பல்வேறு மலர்ச்செடி அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு உள்ள கண்ணாடி மாளிகையில் பூந்தொட்டி அலங்காரங்கள் ஏற்கனவே உள்ள நிலையில் புதிதாக கள்ளிச்செடி அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. 45 ரகங்களில் கள்ளிச்செடிகள் பூக்கள் வைத்துள்ள நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் இதில் பூக்கள் பூக்கத் தொடங்கும் இந்த கள்ளிச்செடி அலங்கார வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்கின்றனர்.