நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சிக்குட்பட்ட பால ஊராட்சியில் நடந்து முடிந்த பணிகளையும் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2.94 லட்சம் மதிப்பில் தென்றல் நகரில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய சுற்றுச்சுவர் கட்டிடத்தையும் இதே ஊராட்சிக்குட்பட்ட மேரிலேண்ட் பகுதியில் 52.91 இலட்ச ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் மூல தன மானிய திட்டத்தின் கீழ் ரூ. 24.40 லட்சம் மதிப்பில் மேரிலேண்ட் பகுதியில் பலப்படுத்தப்பட்ட சாலை பணிகள் என மொத்தம் ரூ. 80.25 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, செயற்பொறியாளர் சுஜாதா,வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.