சாலையில் யானைகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் சாலையில் யானைக் கூட்டம்;

Update: 2021-02-20 16:07 GMT

மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் கெத்தை சாலையில் அவ்வப்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். குறுகிய சாலை என்பதால் குறுக்கே யானைகள் நடமாடினால் வாகனங்களை இயக்குவது மிகவும் சிரமமானதாகும்.


இந்நிலையில் இச்சாலை வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற சில இளைஞர்கள் சாலையோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த யானைகளை இடையூறு செய்யும் வகையில் புகைப்படம் எடுத்து கூச்சலிட்டுள்ளனர். இதில் ஆக்ரோஷம் அடைந்த யானை அவர்களைத் துரத்தியது இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மேலும் இதுபோன்று வனவிலங்குகளை இடையூறு செய்பவர்கள் மீது வனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News