உதகை நகராட்சி அலுவலகம்; முற்றுகையிட்டு ஆர்பாட்டம்

உதகையில் நகராட்சி மேற்பார்வையாளரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

Update: 2021-02-20 15:06 GMT

உதகை நகரில் நகராட்சி மேற்பார்வையாளரை பணி செய்து கொண்டிருக்கும் பொழுது தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுமார் 500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேற்பார்வையாளரை தாக்கிய நபரை கைது செய்யும் வரை பணிக்கு செல்ல மாட்டோம் எனவும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.

இதனையடுத்து உதகை நகராட்சி நகர் நலஅலுவலர், தூய்மைப் பணியாளர்கள் இடையே பேசும்பொழுது, மேற்பார்வையாளரை தாக்கிய நபர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளதாகவும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News