தூய்மை பணியின் போது மேற்பார்வையாளர் மீது தாக்குதல்

உதகையில் பனியின் போது நகராட்சி மேற்பார்வையாளரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 100 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

Update: 2021-02-19 15:37 GMT

உதகையில் இன்று தலையாட்டு மந்து என்னும் பகுதியில் மாத தூய்மை பணிக்காக நகராட்சி மேற்பார்வையாளர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணியை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கடையின் முன்புறம் குப்பைகளை கொட்டிய கடை உரிமையாளரிடம் மேற்பார்வையாளர் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து வெளியில் குப்பைகளை கொட்டி வந்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து அவ்விடத்தில் இருந்த கடையின் உரிமையாளரின் உறவினர் கோபத்துடன் மேற்பார்வையாளரை சராமரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மேற்பார்வையாளரை தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் தாக்கப்பட்ட மேற்பார்வையாளரை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று உடனடியாக தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் நாளைமுதல் தூய்மை பணிகள் நகரில் நடைபெறாது என தூய்மை பணியாளர்கள் கூறினர்.

Tags:    

Similar News