"உதகை மலர் கண்காட்சி" பொது மக்களிடம் கருத்து கேட்பு
உதகையில் இந்தாண்டு நடைபெறும் 124 வது மலர் கண்காட்சியில் சிறந்த அலங்கார வடிவமைப்பிற்கு இணைய தளம் மூலம் கருத்து பதிவிடலாம்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. அதேபோல் இந்த ஆண்டும் கோடை விழா நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சியின் போது சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு பிரம்மாண்ட மலர் சிற்பங்கள் வைப்பது வழக்கம். இந்த ஆண்டு தற்போது பொதுமக்களின் கருத்துக்களை பதிவிட மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் 124வது மலர் கண்காட்சிக்காக பூங்காவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பொதுமக்கள் தங்களது படைப்புகளை nilgiris.nic.in மற்றும் tnhorticulture .gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
இந்த ஆண்டு சிறப்பு படைப்புகளை மேற்கொள்வோருக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.