உதகையில் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Update: 2021-02-04 10:00 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் .

உதகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டியும் குப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகங்கள்,செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியமும் , பேரூராட்சி நகராட்சி மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திடவும் கொரோனா பணி பார்க்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கிடவும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

Similar News