உதகை : கண்களுக்கு விருந்தளித்த சூரிய உதயம்

Update: 2021-02-03 06:00 GMT

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அதிகாலை சூரிய உதய காட்சி அனைவரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

நீலகிரி இயற்கை அழகை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அதிகமாக விரும்புகின்றனர். வெயில் காலம் மட்டுமல்லாமல் மழை, காலங்களிலும் மாவட்டத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் பல இடங்கள் உள்ளன.இதில் உதகை அரசு தாவரவியல் பூங்கா முக்கியமான இடமாக திகழ்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை உறைபனி காணப்பட்டு வரும் நிலையில் அதிகாலை சூரியன் உதயமாகும் இயற்கை காட்சி சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் உள்ளூர் மக்கள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. இதை பலரும் அவர்களது செல்போனில் படமெடுத்து மகிழ்கின்றனர்.

Tags:    

Similar News