ஊட்டியில் பறவைகளின் வலசை துவங்கியது

உயிர்சூழல் மண்டலமாக உள்ள நீலகிரியில் தற்போது அரிய வகை பறவை இனங்களின் வலசை துவங்கியுள்ளது

Update: 2021-01-30 14:36 GMT

நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர்ச்சூழல் மாவட்டமாகும் இந்த மாவட்டத்தில் ஏராளமான பறவைகள் வனவிலங்குகள் உள்ளன.


உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் தற்போது பறவைகளின் உள்ளூர் வலசை பயணம் துவங்கியுள்ளது. இந்த உள்ளூர் வலசையில் பறவைகள் மலைப் பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிகளிலும் ஒரு மலைப்பகுதியில் இருந்து மற்றொரு மலை பகுதிகளுக்கும் இடம்பெறுவது வழக்கம் இந்த ஆண்டு வலசைப்பாதை பயணம் சற்று தாமதமாக துவங்கியுள்ளது.

காரணம் தொடர்மழை மற்றும் கடுமையான உறைபனி பொழிவு குறைவு ஆகியவை இந்த உள்ளுர் வலசை பாதையை துவங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வலசை பாதையில் ஊட்டி ,கோடநாடு ,குன்னூர், பர்லியார் ,கோத்தகிரி ஆகிய பகுதியில் இருந்து துவங்கும்.

கிங்பிஷர், நீலகிரி லாபிங்திரஸ், ஆரஞ்சு பிளாக் ,பிளைகேச்கர் ஒயிட் ஐ, நீலகிரி பிளை கேப்சர் பிளாக் டிராங்கோ கிரோ வேக்டைல்,செவன் சிஸ்டர்ஸ்,லாபிங் திரஸ்,பபுள் பின்ச்,ஒரண்டல் ஒயிட் அய் ,கிரீக் கேனரி பிளை கேச்சர் ஆகிய பறவைகள் தற்போது வலசை பாதையை துவங்கியுள்ளது இந்த வலசை பாதையில் செல்லும் பறவைகள் நீலகிரியின் பல்வேறு இடங்களில் எளிதாக காண

 முடிகிறது. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா,, குன்னூர் சிம்ஸ் பூங்கா தொட்டபெட்டா மலை சிகரம்,கோடநாடு காட்சி முனை பர்லியார், குன்னூர், கூடலூர் ஊசிமலை காட்சிமுனை ஆகிய பகுதியில் இருந்து இடம்பெறுகின்றது.

இந்தப் பறவைகள் அனைத்தையும் ஊட்டியை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மதிமாறன் வலசை செல்லும் பறவைகளை புகைப்படங்கள் எடுத்தும் காணொளிகள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார். மேலும் அவர் தெரிவிக்கையில் கொரோனா கட்டத்தில் பொதுமக்கள் கூட்டமின்றி சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.


அந்த சமயங்களில் இந்த பறவைகள் அனைத்தும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் எளிதாக காண முடிந்தது இப்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களிலிருந்து தங்களின் இயல்பான வலசை பாதையை துவங்கியுள்ளது . மற்றும் தொடர்மழை பனிப்பொழிவு குறைவு காரணமாக இந்த வலசைப்பாதை தாமதமாக தொடங்கி உள்ளது என்று தெரிவித்தார்.

தங்களைப் போன்ற புகைப்பட கலைஞர்களுக்கு இந்த வலசைப்பாதை சமயம் பறவைகளை காண புகைப்படங்கள் எடுக்க சிறந்த சமயங்கள் ஆகும் . தற்போது பறவைகளின் உள்ளூர் வலசை பாதை துவங்கியுள்ளதால் பறவைகளை காண்பது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்

Tags:    

Similar News