ஊட்டியில் மீண்டும் உறைபனி காலம் துவங்கியது. இதில் புல்வெளிகள் விவசாய நிலங்கள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காணப்பட்டது.
நீலகிரியில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் உறைபனியின் தாக்கம் ஜனவரி இறுதி வரை காணப்படும்.உறைபனியின் தாக்கம் காரணமாக புல்வெளிகள் விளைநிலங்கள் உள்ளிட்டவை கருகும் நிலை ஏற்படும். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இடைப்பட்ட நாட்களில் நீர் பனியும் மழையும் காணப்பட்டதால் உறைபனி குறைவாக காணப்பட்டது.இதையடுத்து கடந்த இரண்டு நாட்களில் இன்று உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக உதகை நகரில் குதிரைப்பந்தய மைதானம், காந்தல் , தலைகுந்தா பகுதி, அரசு தாவரவியல் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.இதனால் புல் மைதானங்கள் மற்றும் விளை நிலங்களின் மீது உறை பனி படர்ந்து வெள்ளை கம்பளம் போல் காட்சியளித்தது.