நீலகிரியில் இயக்கப்படும் பாரம்பரியமிக்க மலை ரயில் கட்டணத்தை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி தொகுதி எம்.பி., ஆ.இராசா தெரிவித்தார் .
மலை ரயிலில் உதகை முதல் குன்னூர் வரை நீலகிரி தொகுதி எம்.பி ஆ.இராசா பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், பாரம்பரியமிக்க உதகை மலை ரயிலில் தற்போது பயணம் செய்ய 300 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், ரயிலில் உள்ள பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் பேசி கட்டணத்தை இன்னும் குறைத்து பழைய கட்டணத்தின் படி மலை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்த போவதாக ஆ.இராசா தெரிவித்தார்.