நீலகிரி மாவட்டத்தில் இணையம் வழியே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

https://meet.google.com/kha-enyh-nib என்ற இணைப்பின் மூலம் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-15 13:47 GMT

கலெக்டர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்தில், ஜனவரி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான வருகிற 21-ந் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், இயற்கை விவசாய குழுக்கூட்டம் இணையதளம் மூலம் நடைபெறுகிறது.

விவசாயிகள்,  விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் (மின்விளக்கு, சாலை, குடிநீர் போன்ற பொதுவான கோரிக்கைகளை தவிர்த்து) வருகிற 17-ந் தேதிக்குள்,  தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்.72, உதகை-643001 என்ற அலுவலக முகவரிக்கு,  தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

ஆன்லைன் மூலம் நடைபெறும் கூட்டத்தில் https://meet.google.com/kha-enyh-nib என்ற இணைப்பின் மூலம் விவசாயிகள் கலந்துகொள்ளலாம். ஆன்லைனில் மாவட்ட கலெக்டர், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்வதால், விவசாயிகள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News