உதகையில் முதியோர் தின விழா: கலெக்டர் பங்கேற்று உற்சாகம்

விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.;

Update: 2021-10-07 12:03 GMT

நஞ்சநாடு முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற, சர்வதேச முதியோர் தின விழாவில் கலெக்டர் பங்கேற்றார். 

நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், சர்வதேச முதியோர் தின விழா நஞ்சநாடு முதியோர் காப்பகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

அதன்பின்,  கலெக்டர் பேசுகையில்,  நீலகிரியில் 7 முதியோர் காப்பகங்களில்,  260 முதியோர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கிலும் முதியவர்களுக்கு எவ்வித தடையும், பாதிப்பும் இன்றி உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது.

காப்பகங்களில், முதியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை மூலம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதியோர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அத்தியாவசிய பணிகளை தவிர தேவையின்றி வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார்.

விழாவில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) தேவகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News