குன்னூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் வருவதால் வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காப்படுகிறது, மாவட்டத்தில் தற்போது கொரனா தொற்று குறைந்து வருவதால் வியாபாரிகள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்கும் நிலை மேலும் வார விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது குன்னூர் அருகேயுள்ள லேம்ஸ்ராக்,மற்றும் டால்பின்நோஸ் போன்ற மலை சிகரங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள காட்சிமுனையில் நின்று இதமான காற்றில் இயற்கை அழகை ரசித்தனர் தவழ்ந்து வரும் மேகக்கூட்டம், உயர்ந்த மலை சிகரங்கள் அடர்ந்த வனப்பகுதிகள்,ஆதிவாசிகளின் குடியிருப்புகள் எதிர் திசையில் வெள்ளியை உருக்கி ஊற்றுவது போல் காட்சி தரும் கேத்ரின் நீர் வீழ்ச்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது குடுப்பதுடன் வந்த சுற்றுலா பயணிகள் காட்சி முனையில் நின்று குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் மேலும் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் வருவதால் வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிட தக்கது.