குன்னூரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
குண்டல் பேட் பகுதியில் இருந்து கோவை பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 1. 7 டன் குட்கா குன்னூரில் பறிமுதல் செய்யப்பட்டது;
கர்நாடகாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், குன்னூர்லெவல் கிராசிங் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த கர்நாடகா லாரியை சோதனை செய்ததில் தேங்காய் மட்டைகளுக்குள் 75 மூட்டைகளில் புகையிலைபொருட்கள் இருந்துள்ளது
தொடர்ந்த விசாரணை நடத்திய போலீசார் மைசூரை சேர்ந்த டிரைவர் சுரேஷ், குருராஜ், ராஜா ஆகியோரை கைது செய்தனர். இதில் 1. 7 டன் அளவிலான ஹான்ஸ், குட்கா மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த வர்த்தக மதிப்பு 8.35 லட்சம் இருக்கும் எனவும் மார்கெட் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.