குன்னூரில் கூரியர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு
குன்னூரில், கூரியர் அலுவலக பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள பெட்போர்ட் பகுதியில், இ-காம் எக்ஸ்பிரஸ் என்ற கொரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் அலுவலகத்தில், தொகையான சுமார் 1 லட்சம் பணத்தை வைத்திருந்தனர். நேற்று இரவு, அந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து. உள்ளே சென்ற மர்ம நபர்கள், அந்த பணத்தை திருடி சென்றதாக, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கடை வியாபாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில், கொரியர் அலுவலகத்தில் பணம் திருடு போன சம்பவம் , அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.