கோத்தகிரியில் உலா வரும் ஒற்றை காட்டெருமை - மக்கள் அச்சம்
கோத்தகிரி நகர பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகள் நகர பகுதிக்கு உலா வருகின்றன.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது தற்போது ராம்சந்த் பகுதியில் காட்டெருமை உலா வந்ததால் பொதுமக்கள் ,வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.