கோத்தகிரி பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கோத்திகிரி பகுதியில் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகள் சர்வ சாதாரணமாக உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோத்தகிரி நகர் பகுதியில் அமைந்துள்ள கோட்டாஹால் பகுதியில் இருந்து தர்மோனா செல்லும் சாலையில் கரடி ஒன்று உணவு தேடி தேயிலை தோட்டத்தில் பேரிக்காய் மரத்தின் மீது ஏறி பேரிக்காய் பறித்து விட்டு மீண்டும் மரத்தில் ஏறியபடியே இறங்கி மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் சென்றுவிடுகிறது.
கரடிகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருவது வாடிக்கையாக உள்ள நிலையில் மனித விலங்கு மோதல் ஏற்படாதவாறு வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்க்கொண்டு கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.