தேயிலை விவசாயிகளுக்கு மானியமாக உபகரணங்கள் வழங்கல்
இந்திய தேயிலை வாரியம் சார்பில் சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு மானியமாக ரூ. 1 கோடியே 21 லட்சம் வனத்துறை அமைச்சர் வழங்கினார்.;
குன்னூரில் இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை தோட்டங்களை இயந்திரமயமாக்குதல் மற்றும் சிறப்பு தேயிலை தூள்களை பிரபலபடுத்துதல், மானியம் வழங்கும் நிகழ்ச்சி வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 275 சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு கவாத்து இயந்திரம், தேயிலை கொழந்து அறுவடை செய்யும் இயந்திரங்கள், சிறப்பு வகையான ஆர்கானிக் தேயிலை தூள் விற்பனை செய்யும் மையம், வேலையற்ற சிறு தேயிலை விவசாயி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க, மினி தேயிலை தொழிற்சாலை அமைப்பதற்கான மானிய தொகையினை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி, இனை செயல் இயக்குநர் ஹரிபிரசாந்த், இந்திய தேயிலை வாரிய உறுப்பினர் குமரன் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.