கோத்தகிரியில் உலா வரும் கரடி: கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

கோத்தகிரியில் உலா வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்; கூண்டு வைத்து கரடிகளை பிடிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-28 11:26 GMT

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக மிளிதேன் கிராமத்தில், இரண்டு கரடிகள் காலை நேரங்களில் உலா வருகின்றன.

இதனால், அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். கரடி நடமாடுவதால், மக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகி வீடுகளில் முடங்கியுள்ளனர். 

கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த, அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News