கோத்தகிரியில் வீட்டினுள் நுழைய முயன்ற கரடி
வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பழங்களை சாப்பிடுவதற்காக தடுப்பு சுவர் மீது ஏறி வீட்டுக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டது.;
நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரு குட்டிகளுடன் கரடி ஒன்று உலா வருகிறது. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் உலா வரும் இந்த கரடிகள் , இரவு நேரத்தில் கிராமப் பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் இரு குட்டிகளுடன் தாய் கரடி வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பழங்களை சாப்பிடுவதற்காக தடுப்பு சுவர் மீது ஏறி வீட்டுக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டது. இதை அறிந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக கரடியை விரட்டியதால், குட்டிகளுடன் தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதை அறிந்த வனத்துறையினர் உடனடியாக கரடியை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்துள்ளனர்.