கோத்தகிரியில் வாகனங்களை வழிமறித்த கரடி

தேயிலை தோட்டத்திலிருந்து தண்ணீா் தேடி சாலையில் உலா வந்த கரடியால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனா்.;

Update: 2021-04-27 11:52 GMT

கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டத்திலிருந்து தண்ணீா் தேடி சாலையில் உலா வந்த கரடியால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்குகள் குடியிருப்புக்குள் தண்ணீா் மற்றும் உணவைத்தேடி வரும் வனவிலங்குளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். இந்த நிலையி்ல் கோத்தகிரி கேத்தரீன் நீா்வீழ்ச்சி செல்லும் சாலையின் ஒரத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் மற்றும் உணவைத் தேடி கரடி ஒன்று தேயிலை தோட்டத்திலிருந்து வெளியேறி குடியிருப்பு அருகில் வந்ததது. இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

தொடா்ந்து கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். வனத்துறையினா் இந்த பகுதியில் கண்காணித்து கரடிகளை வேறு பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக் கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News