கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு கேடயம்
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் கட்டுரை போட்டியில் மாநில அளவில் வெற்றி பள்ளி மாணவிக்கு லஞ்ச ஒழிப்பு துறை மூலம் கேடயம் வழங்கப்பட்டது.;
லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மாநில அளவில் இடம் பிடித்த குன்னூர் மாணவிக்கு, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை சார்பில், 'விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா, என்கிற தலைப்பில் மாநில அளவில் ஆன்லைன் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்காக மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா தமிழக அளவில 7 இடம் பிடித்து நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை சார்பாக சான்றிதழும் கேடயமும் அறிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக குன்னூரிலேயே விழா நடத்தப்பட்டது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுரூதின், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் கீதாலட்சுமி ஆகியோர் மாணவி கோபிகாவுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவிகளும் பாராட்டு தெரிவித்தனர்.