சுற்றுலாபயணிகளை கவரும் போயின் சேட்டியா மலர்

சிம்ஸ் பூங்காவில் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட போயின் சேட்டியா பூத்துள்ளதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்

Update: 2021-02-16 16:07 GMT

குன்னுார் சிம்ஸ்பூங்காவில் 'போயின்சேட்டியா' எனப்படும், அரிய இலை மலர்கள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெளிநாட்டு மலர்கள், மரங்கள் அதிகளவில் உள்ளன. இதில், 'போயின்சேட்டியா' என அழைக்கப்படும் போன்சாய் மரங்கள், அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை.

இந்த மரத்தின் இலைகள், மலரை போன்று சிகப்பு நிறத்தில் காணப்படுகின்றன. குன்னுார் சிம்ஸ்பூங்காவில் குட்டை ரக மரங்களில் தற்போது இந்த மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து, 'போட்டோ' எடுத்துசெல்கின்றனர். மேலும் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம், கிளண்டேல் உட்பட சில இடங்களில் இவை பசுமை நிறைந்த தேயிலை தோட்டங்களின் இடையே சிவப்பு நிறத்தில் வசீகரிக்கிறது. மேலும், இவற்றின் நாற்றுகள் குன்னுார் சிம்ஸ்பூங்கா நர்சரியில், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News