குன்னூரில் கார் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் அருகேயுள்ள வண்டிச்சோலை பகுதியில் அதிவேகத்தில் வந்த கார் கவிழ்ந்து விபதுக்குள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;

Update: 2021-02-02 16:18 GMT

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான வளைவுகள் உள்ளதால் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்குவதற்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் வண்டிச்சோலை என்னும் பகுதியில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து இரண்டு வாகனங்களின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் வாகனத்தை இயக்கிய சுந்தர்ராஜன் என்பவர் காயமடைந்தார்.பின்பு அங்கிருந்த வாகன ஓட்டிகள் சிலர் அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் போக்குவரத்து சீர்செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவிலான விபத்துகள் நடப்பதால் அந்த சாலையில் வேகதடை அமைக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News