கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கூடலூர் அருகே குந்தி தால் வயல் பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர்ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்;

Update: 2021-10-14 15:14 GMT

 கூடலூர் அருகே உள்ள குந்திதால் வயல் பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்திதால் வயல் பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் அருகே உள்ள கிராம பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக குந்தி தால் வயல் பகுதியில் உலாவரும் காட்சி ஆணையால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் காட்டு யானை உலா வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News