கூடலூர் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம்: சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை
குடியிருப்பில் தங்கியிருந்த நபர்கள்காயங்களுடன் மீட்கப்பட்டுகூடலூர்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.;
கூடலூர் அருகே உள்ள கோழிப்பள்ளி கிராமத்தில் இரவு புகுந்த காட்டுயானைகள் பழங்குடியினர் குடியிருப்புகளை முற்றிலும் இடித்து சேதப்படுத்தியதில், குடியிருப்பில் தங்கியிருந்த நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் .
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிப்பள்ளி கிராமத்தில் பனியர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் வனப்பகுதியின் அருகே அமைந்துள்ளதால் அதிகாலை 3 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பழங்குடியினரின் நான்கிற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை முற்றிலும் இடித்து சேதப்படுத்தியது. மேலும் குடியிருப்பில் தங்கியிருந்த சங்கரன் வயது 35 மற்றும் வனித்தா என்ற 8 மாத குழந்தை உட்பட மூன்றுக்கும் மேற்பட் நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயமடைந்த நபர்களை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில், நேற்று இரவு குடியிருப்புகளை முற்றிலும் இடித்து சேதப்படுத்தியதில் குடியிருப்புகள் முற்றிலும் இடிந்து சேதப்படுத்தியது. தொடர்ந்து இப்பகுதியில் காட்டு யானைகள் கிராமப்பகுதியில் நுழையாமல் இருக்க சோலார் வேலிகள் அமைத்து தரவேண்டும் எனவும், குடியிருப்புகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் புதிய குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.