கூடலூரில் தொடரும் காட்டு யானை அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடரும் யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.;
காட்டு யானை சேதப்படுத்திய வீடு.
கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதோடு, வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. ஏற்கனவே வனத்துறையினரிடம் பலமுறை கூறியும் வனத்துறையினர் இதுவரை யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை அளித்துள்ளது.
இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி ஓடக்கொல்லி பகுதியில், இரு பழங்குடியினர்களின் வீட்டை சூறையாடிய காட்டு யானை உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் தீவிரமாக யானை நடமாட்டத்தை கண்காணித்து அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.