வாகன ஓட்டிகளை வழிமறித்த காட்டு யானை
ஊட்டி அருகே மசினகுடி சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஊட்டி அருகே உள்ள மசினகுடி பகுதியில் இரவில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசனகுடி, மாயாறு . சிங்காரா பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி , சிறுத்தை, மான், காட்டுமாடு , கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில் வாழைத்தோட்டம் பகுதியில் இரவு உலாவந்த ஒற்றை காட்டு யானை சாலையிலேயே நின்றது. மேலும் சாலை வழியே சென்ற வாகனத்தை தாக்க முயன்றதால், பீதியடைந்த வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.