கூடலூர் அருகே கடாமானை வேட்டையாடிய செந்நாய் கூட்டம்

கூடலூர் அருகே மசினகுடி சாலையில் 25 செந்நாய்கள் கடாமானை வேட்டையாடியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2022-03-30 10:11 GMT

மசனகுடி சாலையில் செந்நாய்கள் கடா மானை வேட்டையாடிய காட்சி.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சமீப காலமாக சாலையோரம் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில் அடர்ந்த வனப்பகுதியில் மட்டும் காணப்படும் செந்நாய் கூட்டங்கள் தற்போது சாலையோரங்களில் உள்ள வனப்பகுதிகளில் உலா வருகின்றன.

முதுமலை செல்லக்கூடிய மசனகுடி சாலையில்,  இன்று 25 செந்நாய்கள் கொண்ட கூட்டம்,  பிரதான சாலையில் கடா மானை வேட்டையாடி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றன. சாலையில் செந்நாய் கூட்டம் கடா மானை வேட்டையாடிய காட்சியை வாகன ஓட்டி ஒருவர் படம்பிடித்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News