முதுமலையிலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை

நீலகிரி முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் எடை பரிசோதனை செய்வது வழக்கமாக உள்ளது.;

Update: 2021-08-30 10:53 GMT

முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற வளர்ப்பு யானைகள் முகாம்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளர்ப்பு யானைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை எடை பரிசோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் வளர்ப்பு யானைகளுக்கான எடை பரிசோதனை பணி இன்று நடைப்பெற்றது. இதில் நான்கு கும்கி யானைகள் தேவாலா மற்றும் புளியம்பாறை பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டும் பணிக்கு அனுப்பபடுள்ளது.

மூன்று கும்கி யானைகள் மசினகுடி பகுதியில் ரிவால்டோ யானையை பாதுகாப்பதற்கும், மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வராதவாறு கண்காணிக்கவும் அனுப்பபட்டுள்ளது. மீதமுள்ள யானைகளுக்கு வனத்துறைக்கு சொந்தமான தொரப்பள்ளி உள்ள எடை மேடையில் இன்று எடை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அதிகப்படியாக கிரி என்ற யானை 150 கிலோ வரை எடை கூடியுள்ளதாகவும், மற்ற யானைகளுக்கு 50 கிலோ வரை எடை கூடி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News