விவசாய நிலங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க கூடாது; காந்தி நகர் மக்கள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

Nilgiri News, Nilgiri News Today - விவசாய நிலங்களில், வனத்துறை கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என, காந்தி நகர் மக்கள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியது.

Update: 2023-09-04 09:54 GMT

Nilgiri News, Nilgiri News Today- ஓவேலி பேரூராட்சியில், காந்தி நகர் மக்கள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. 

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில், காந்தி நகர் மக்கள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம், நேற்று மாலை 4. மணியளவில் நடந்தது.

காந்தி நகரில் நடந்த இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் டி.சுகுமாறன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் பழனியாண்டி, நாகேந்திரன்,ஆறுமுகம், சத்தியசீலன், ஆனந்தராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் துவக்கத்தில், சங்க செயலாளர் ரிச்சர்டு வரவேற்றார்.

ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் வனத்துறை கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

மக்களின் வாழ்விட பகுதிகளையும், விவசாய நிலங்களையும், மக்களின் கருத்தை கேட்காமலும், முறையான முன்னறிவிப்பு செய்யாமலும் காப்பு காடுகளாக அறிவித்த வருவாய்த்துறையினரை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மக்கள் வாழும் பகுதிகள் வனமாக மாற்றப்பட்டிருப்பின், அதுகுறித்தான தகவல்களை வருவாய்த்துறை அந்நிலங்களில் குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.


ஓவேலி பகுதியில் பெரும்பாலான மக்கள் பயன்பாட்டு நிலங்கள் வனமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அவ்வாறு இருப்பின் வருவாய்த்துறையினர் அந்நிலங்களை மறுவரை செய்து மக்கள் வாழும் பகுதியாக்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.எதிர்வரும் 8ம் தேதி அன்று வருவாய்த்துறையினர், கூடலூரில் ஏற்பாடு செய்துள்ள அமைதி பேச்சுவார்த்தையில், சங்க நிர்வாகிகள் மற்றும். மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் வி.பி.பாஸ்கரன்,இரா.கேதீஸ்வரன்,சிவக்குமார்,திருப்தி மணி, சுப்ரமணியம், முருகையா,ஆன்ட்ரூஸ், உள்ளிட்ட பலர் தங்களது கருத்துகளை வழங்கினர்.

கூட்டத்தின் முடிவில், சுப்ரமணியம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News