கூடலூர் அருகே வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கூடலூர் அருகே கால்நடைகளை கொன்று வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

Update: 2021-08-02 01:59 GMT

சேமுண்டி, அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி ( பைல் படம் )

கூடலூர் அருகே சேமுண்டி அம்பலமூலா கிராமத்தில் புலி நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த வாரம் மூன்று பசு மாடுகளை அடித்துக் கொன்ற புலி நேற்று மீண்டும் ஒரு பசுமாட்டை அடித்துக் கொன்றது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீட்டிழுப்பு வனத்துறையினர் இரவு பகல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கிக் கொண்டு பொது மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் கால்நடைகளை கண்காணித்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமென ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து புலி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகுந்த அச்சமடைந்துள்ளனர் விரைவில் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News