நீலகிரியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் நேற்று, தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2022-09-18 01:33 GMT

தெருநாய்களுக்கு தடுப்பூசி.

தமிழகத்தின் அண்டை மாநிலம் கேரளாவில், சமீபமாக வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருவில் செல்லும் நபர்களை வெறி நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க 'உலக கால்நடை பராமரிப்பு இந்தியா' என்ற அமைப்பு, நீலகிரி முழுவதும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக தெரு நாய்கள் பிரத்யேக வலை மூலம் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம், கூடலூரில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.

Similar News