கூடலூர் அருகே கிராம பகுதிகளில் தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கிராப்பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.;

Update: 2021-07-18 02:44 GMT

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை பகுதியில் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை 8வது வார்டில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுனில் மற்றும் வார்டு உறுப்பினர் பிந்து ஆகியோர் முன்னிலையில் சேமுண்டி பகுதியில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களிலும் ஊராட்சித் தலைவர் சுனில் தலைமையில் தடுப்பூசிகள் செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News