நீலகிரியில் இன்று 23-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
மாவட்டத்தில் மொத்தம் 10,72,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.;
நீலகிரியில் இன்று 23-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 23-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் 224 நிலையான முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 244 முகாம்களில் 976 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து வீடு, வீடாக சென்று பணியாளர்கள் செலுத்தினர். நீலகிரியில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5,44,732 பேர், 5,27,812 பேர் மொத்தம் 10,72,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.