கூடலூர் அருகே தொடரும் புலியின் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 கால்நடைகள் இன்று ஓர் கால்நடை என மொத்தம் 7 பசுகளை புலி கொன்றுள்ளதால் பொதுமக்கள் பீதி.

Update: 2021-09-22 02:56 GMT

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் சமீபகாலமாக புலியின் நடமாட்டம் காணப்படுவதோடு கால்நடைகளையும் அடித்துக் கொன்று வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 மாடுகளை அடித்துக் கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

வனத்துறை சார்பில் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டும்  கிராமப்பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வந்தனர். இந்நிலையில் இன்று சேமுண்டி எனும் பகுதியில் விவசாயி ஒருவரின் பசுமாட்டை புலி அடித்து கொன்றது. இது மீண்டும் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வனத்துறையை கண்டித்து அக்கிராம மக்கள் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளி சாலையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News