கூடலூர் அருகே 2 பசு மாட்டை கொன்ற புலி: பாெதுமக்கள் பீதி
கூடலூர் ஸ்ரீ மதுரை கோழிக் கண்டி பகுதியில் புலி தாக்கி 2 பசு மாடுகள் இறந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.;
கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை கிராம பகுதியில் கோழிகண்டி என்னுமிடத்தில் புலி தாக்கி பசுமாடு இறந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் புலி கால்நடைகளை தாக்கி கொன்றது. இதுமட்டுமல்லாமல் மனிதரையும் தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து வனத்துறையினரிடம் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று மாலை திடீரென கோழிகண்டிப் பகுதியில் சதாசிவம் என்பவரது 2 பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது. இது அப்பகுதி மக்களிடையே மீண்டும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இறந்த கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.