கூடலூர் அருகே புலியை தேடும் பணி நாளையும் தொடரும்: வனத்துறை தகவல்
அடர்ந்த வனம் என்பதால் 5 மணிக்கு மேல் பணியை தொடர முடியவில்லை என வனத்துறை தகவல்
புலி நேற்று (13.10.21) நம்பிகொன்னை அருகில் ஒரு வயலில் புலி இருந்ததை பார்த்து தேடுதல் பணி நடைபெற்றது. புலி நேற்று இரவு ஓம்பேட்டா வரைக்கும் பயணித்திருக்கிறது. ஓம்பேட்டா அருகில் உள்ள கேமராவில் மட்டுமே டி23 புலி பதிவாகியிருந்தது. எனவே இன்று (14.10.21) மூன்று குழுக்கள் அந்த இடத்திற்கு சென்று கண்காணித்தலில் புலியின் கால் தடம் ஓம்பேட்டா மற்றும் நம்பிகொன்னை பகுதிகளுக்கு இடையில் தான் சென்றிருப்பது தெரிய வந்திருப்பதாகவும்,அங்கு அடர்ந்த காடு என்பதனால் 5 மணிக்கு மேல் பணியை தொடர முடியவில்லை. புலியை தேடும் பணி நாளை மீண்டும் தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..