நீலகிரி எல்லையில் கட்டாயமாக திருப்பி அனுப்பப்படும் லாரிகள்
நீலகிரியிலிருந்து கர்நாடகா செல்லும் லாரி ஓட்டுநர்கள் கொரோனா நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடக கட்டுபாடுகளை கடுமையாக்கி இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா பகுதியில் உள்ள கர்நாடக சோதனை சாவடியில் பணியில இருந்த போலீசார் கர்நாடக மாநிலத்திற்குள் நுழையும் லாரி ஓட்டுநர்களுக்கும் RTPCR சான்று மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றும் கட்டாயம் என கூறினர்.
தொடர்ந்து 2 ஆவணங்கள் இல்லாத லாரிகளும் திருப்பி அனுப்பபட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழக லாரி ஓட்டுநர்கள் லாரிகளை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் எல்லையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கர்நாடக போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழகம், கர்நாடக மாநிலங்கள் இடையே சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக அதிகாரிகள் லாரிகளை செல்ல அனுமதித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடபட்டு, போக்குவரத்து சீரானது.மேலும் லாரி ஓட்டுநர்களுக்கு RTPCR பரிசோதனை சான்று கட்டாயம் என கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.